முல்லைத்தீவு உப்புமாவெளியில் தொடரும் தையல் பயிற்சி
முல்லைத்தீவு உப்புமாவெளியில் தொடர்ச்சியாக தையல் பயிற்சி வகுப்புக்களை இலவசமாக மேற்கொண்டுவரும் செயற்பாடு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பயனாளிகள் குறிப்பிடுகின்றனர்.
பல குழுக்கள் பயிற்சி பெற்று சென்றுவிட இன்னும் பல புதிய குழுக்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெவ்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த முயற்சி தொடர்வது ஆரோக்கியமான முன்னெடுப்பாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு
இந்நிலையில், வறுமைக் கோட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்களின் பெண்கள், இந்த தையல் பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொண்டு பயனடையலாம் என தையல் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவரான ஞானி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொகுதியினருக்கான தையல் பயிற்சி வகுப்பினை 'ஜுவ ஊற்று' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தன்னுடைய இரண்டாவது இலவச தையல் பயிற்சி குழுவுக்கான பயிற்சியாக ஆரம்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயிற்சி பெற்ற பல பெண்கள் தையல் தொழிலில் முனைப்பாக ஈடுபட்டு வருவதோடு குடும்ப பொருளாதாரத்தினை சுமப்பதில் பெண்களின் பங்களிப்பும் இதனால் கிடைக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |