முல்லைத்தீவு கடலில் கரையொதுங்கிய ஆழ்கடல் மீன்பிடி படகு!
யாழ் - மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீன்பிடி படகு ஒன்று இயந்திரம் பழுதடைந்த நிலையில் நேற்று (18.12.2022) அதிகாலை முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.
மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து மன்னார் மீனவர் ஒருவருக்கு சொந்தமான குறித்த ஆழ்கடல் மீன்பிடி படகு கடந்த 02.12.2022 அன்று கடற்தொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ளது.
கரை ஒதுங்கியது
நடுக்கடலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயந்திரம் பழுதடைந்த நிலையில் எவ்வித தொடர்புகளும் இல்லாமல் கரை ஒதுங்கியுள்ளதாக படகில் பயணித்த மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த படகின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து படகினை கரைக்கு கொண்டுவந்து பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் திருத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
