முல்லைத்தீவு - புளியம்பொக்கணை சந்தி பாலம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு - பரந்தன் வீதியின் புளியம்பொக்கணை சந்தியிலுள்ள பிரதான பாலமானது பல வருடங்களின் பின்பு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு குறித்த பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை உடைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
தற்காலிக பாலம்
தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாகவும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக நிதியின்மை காரணமாகவும் குறித்த புனரமைப்பு கைவிடப்பட்டிருந்தது.

குறித்த பாலத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்திருந்தனர்.
தொடர்ந்து கிராம அமைப்புக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து புனரமைப்பு பணி முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam