முல்லைத்தீவில் மூன்று இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு பற்றாக்குறை என்பனவற்றை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (07) காலை, மதியம் என மூன்று இடங்களில் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொதுமக்கள் அறிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு நகர் பகுதியில் காலை 10.00 மணிக்கு “பயங்கரவாத தடைச்சடட்டத்தினை உடன் நிறத்த கோரியும்”, “எமக்குத்தேவை கௌரவம்”,“சமத்துவம் மற்றும் ஜனநாயகம்” என்பவற்றை வலியுறுத்தியும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தடன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஜக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "கோட்டபாய அரசின் காட்டுமிராண்டித் தனமான ஆட்சியைக் கண்டித்தும்", "அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு", "மின்சாரம்,பெற்றோல்,டீசல்,மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தும்" காலை 10.00 மணியில் இருந்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் நாட்டில்
எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் மருத்துவ துறை எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை கண்டித்து நண்பகல் 12.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட
மருத்துவமனை முன்பாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
