முல்லைத்தீவில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் பணி புறக்கணிப்பு போராட்டம்
முல்லைத்தீவில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த போராட்டமானது நாளை (25.08.2023) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
மேலும், இந்த போராட்டத்தை நடாத்த இன்று (24.08.2023) முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச்சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் அடையாள கண்டனப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு நட்புரிமையுடன் கேட்டுக்கொள்வதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
