புதுக்குடியிருப்பு கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது சமூக செயற்ப்பாட்டாளர் ஒருவரின் தலைமையில் இன்று (10.10.2023) இடம்பெற்றுள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
இதன் போது கிராமத்தில் காணியற்றவர்களின் காணிப் பிரச்சினை, வடிகால் விவகாரம், ஆவணங்கள் இல்லாத சிக்கல்நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர் இரங்கவேள் தேராவில் கிராம அலுவலர் திருநாவுக்கரசு உமாயிதன் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












