முல்லைத்தீவில் கண்ணீருடன் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் (Video)
முல்லைத்தீவு கடற்கரையில் பொது மக்கள் ஒன்று குவிந்து மாவீரர்களுக்கும் இறந்த பொது மக்களுக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர.
ஆயிரக்கணக்கில் ஒன்று குவிந்த மக்கள், கண்ணீருடன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் குறித்த இடங்களில் பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாகச் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையிலும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களைத் தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.






ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
