முல்லைத்தீவில் பாடசாலை அதிபரை இடம்மாற்ற கோரி பெற்றோர்கள் முன்னெடுத்த போராட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் மாகாவித்தியாலயத்தில் அதிபரை மாற்றம் செய்யகோரி பெற்றோர்கள் இன்று பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
பாடசாலை முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் கைகளில் பதாதைகளை தாங்கியவாறு கோசம் இட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாடசாலை தற்போது உள்ள அதிபர் கடைமையேற்றதில் இருந்து பாடசாலை மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்திறன் அற்ற அதிபராக காணப்படுவதால் பொருத்தமாக ஆளுமைத்திறன் மிக்க அதிபரை நியமித்து தருமாறு கோரியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கல்வி நிலை பாதிப்பு
இந்த அதிபரின் சேவை காலத்தில் புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரணதர பரீட்சை, உயர்தரபரீட்சை போன்றவற்றில் மாணவர்கள் குறைந்தளவிலேயே சித்தியடைந்து வருகின்றார்கள்.

இவ்வாறு பாடசாலை அதிபரின் செயற்திறன் இல்லாத காரணத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளில் மூன்றாம் நிலையில் இருந்த பாடசாலை இப்போது 64 ஆவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கல்வி நிர்வாகம் அதிபரை மாற்றம் செய்து தருமாறு கோரி பல்வெறு பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
இந்த நிலையில் பாடசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய பெற்றோர்களை முல்லை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ந.கந்தசாசன் வந்து பெற்றோர்களின் கோரிக்கை மனுவினை பெற்றுசென்றுள்ளதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.
பெற்றோர்கள் மூவரின் குரல்பதிவு மற்றும் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபடும் காட்சி மற்றும் போராட்டத்தினை நடத்தியவர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர் சந்தித்து அவர்களின் கோரிக்கையினை பெறும் காட்சி என்பன உள்ளன.
எரிபொருள் விலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய கிழக்கு போர் சூழல் : நாளுக்கு நாள் உயரும் விலை
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri