புதுக்குடியிருப்பில் விபத்து: இளைஞன் படுகாயம் (Photo)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பரந்தன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (07.12.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே பாதையில் பயணித்த பட்டாரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குள் புகுந்து கடும் சேதத்திற்கு உள்ளாகியது.
குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam