குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு விஜயம்! (Photos)

Mullaitivu M.A.Sumanthiran IndependenceDay kooruthurmalai
By Independent Writer Feb 04, 2022 05:02 PM GMT
Report

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நாளான இன்று பௌத்தமயமாக்கல் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாப்படுவரும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை குருந்தூர் மலைக்கான கவனயீர்ப்பு விஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம் ஏ சுமந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் , இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து இவ் கவனயீர்ப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு விஜயம்! (Photos) | Mullaitivu Independenceday Sumanthiran Kooruthur

இதன்போது குருந்தூர் மலையில் வைத்து கருத்து தெரிவித்த சுமந்திரன்,

தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கின்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.

நாங்கள் இன்று குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு அவர்கள் செல்லமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் து.ரவிகரன்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,எஸ்.சிறீதரன் ஆகியோர் மனுதாரர்களாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு விஜயம்! (Photos) | Mullaitivu Independenceday Sumanthiran Kooruthur

இந்த வழக்கில் அரசாங்கம் அவ்வாறு இல்லை யாரும் வரலாம் போகலாம் என்று தொல்லியல் திணைக்களத்தின் சத்தியக்கடதாசியினையும் கொடுத்து கூறியுள்ளார்கள். 

வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திற்கு நாங்கள் வருகை தந்துள்ளோம். இங்கே எங்களை தடுக்கவில்லை ஆனால் அதேவேளையில் இடையில் உள்ள தொல்லியல் அடையாளம் என்று வழங்கில் குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற முன்னர் தாதுகோபுரம் அமைந்துள்ளளதாக சொல்கின்ற இடத்தில் இப்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை எங்களால் அவதானிக்க முடிந்துள்ளது.

அவர்களால் கொடுக்கப்பட்ட வழக்கில் கூட இவ்வாறு கட்டுமானப்பணிகள் நடைபெற்றதாக சொல்லவில்லை அதற்கு முன்னர் ரவிகரன்,சிறீதரன் ஆகியோர் இங்கு வந்தபோது அடிமட்டத்தில் தான் இருந்ததாக எனக்கு கூறியுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கின்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு விஜயம்! (Photos) | Mullaitivu Independenceday Sumanthiran Kooruthur

ஆகையில் குருந்தூர் மலையில் சட்டம் கொடுக்காத ஒரு அதிகாரத்தினை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்து புதிதாக ஒரு தாதுகோபுரம் கட்டுவதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது வரும் நாட்களில் மனுதாரர்களின் மறுப்பு சத்தியக்கடதாசியில் நாங்கள் இந்த விடயத்தினை குறித்து சொல்கின்றோம்.

இன்று அந்த இடத்தில் சென்று வழிபடக்கூடியதாக இருந்திருக்கின்றது. ஆனால் கிராமமாக இந்த இடத்தில் வந்து வழிபடுபவர்கள் வந்து போகக்கூடியவாறு இருக்கவேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. அங்கு வழிபடுவதற்கு அடையாளமாக வைத்திருந்த சூலம் உடைக்கப்பட்டு ஒரு குழிக்குள் போடப்பட்டுள்ளதை து.ரவிகரன் அவர்கள் கண்டு ஒரு ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேற்றைய நாள் அதுதொடர்பில் பொலிஸ் அதிகாரி து.ரவிகரன் அவர்களுடன் பேசியுள்ளார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த சூலம் திரும்ப நிறுவப்படவேண்டும் அதில் வந்து வழிபடுகின்ற சுதந்திரம் மக்களுக்கு தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு விஜயம்! (Photos) | Mullaitivu Independenceday Sumanthiran Kooruthur

இதேவேளையில் இந்த குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் நாங்கள் ஒரு இடைக்கால தடையினை கோரியுள்ளோம் அந்த தடை இன்னும் கொடுக்கப்படவில்லை அந்த தடை கொடுக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களின் எதிர்ப்பு பத்திரங்களை கொடுத்துள்ளார்கள் ஏன் தடை உத்தரவு தேவையில்லை என்று சொல்வதற்காக ஆகவே தான் இன்று சுதந்திரமாக வரவிட்டுள்ளார்கள்.

அந்த தடை உத்தரவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரம் தொல்லியல் அடையங்களை பாதுகாப்பது மட்டும் தான் தொடர்ச்சியாக கட்டிடங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்றும் நாங்கள் கேட்டுள்ளோம்.

நீதிமன்றம் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர்கள் சீக்கிரமாக இதனை கட்டி முடிக்கவேண்டும் என்ற தோரணையில் உடனடியாக இதனை கட்டுகின்றார்கள் போல் தென்படுகின்றது.

இதனை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவோம் தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தினால் கொடுக்கப்படாத அதிகாரத்தினை செயற்படுத்தப்படுகின்றார்கள் மட்டுமல்ல இப்படியான கட்டிட வேலை நடக்கக்கூடாது என்று நாங்கள் மன்றில் கோரியுள்ளோம்.

இடைக்கால உத்தரவு சம்மந்தமான விசாரணை வெகுவிரைவில் வருகின்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இதனை செய்து முடிக்க முனைகின்றார்கள் இந்த விடையத்தினையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வருவோம்.

குருந்தூர் மலையினை சுற்றியுள்ள 436 ஏக்கர் வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகள் காலாகாலமாக செய்கைபண்ணி வந்த இடத்தினை இப்போது அதனை தடுத்து சுவீகரிப்பதாகவும், இந்த விகாரைக்கு தேவையான வளங்களை கொடுப்பதற்காக அந்த வயல் நிலங்களை தாங்கள் சுவீகரிப்பதாகவும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குவும் காணி உரிமையாளர்களுக்கு பயிர் செய்கைக்கு தடை விதித்துள்ளார்கள்.

இது மிகவும் மோசமான செயற்பாடு இதற்கு அனுமதியளிக்க முடியாது அதற்கும் சட்டபூர்வமாக செய்யும் அனைத்து விடையங்களையும் நாங்கள் செய்வோம் சட்டபூர்வமாக செய்து சரிவராத நேரங்களில் நாங்கள் நேரடியாக சில விடையங்களை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகளிடம் இருந்து சுவீகரிப்பதற்கு நாங்கள் இடம்கொடுக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.       

    

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US