முல்லைத்தீவு வட்டுவாகலில் புலம்பெயர் உறவுகள் நடத்திய மாபெரும் பட்டத் திருவிழா
முல்லைத்தீவில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து மாபெரும் பட்டத் திருவிழாவை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, இன்றைய தினம் (25.01.2026) பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலாமைய நகரக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பட்டத் திருவிழா
இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை ஏற்படுத்திடும் நோக்கிலும் , சமூக மயமாக்கலை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் இந்தப் பட்டத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் 500 மேற்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டன. அதிலும் குறிப்பாக சிறார்களை ஊக்குவிக்கும் நோக்கில் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி





