முல்லைத்தீவு - ஒட்டன் குளம் சிவன் ஆலயத்திற்கு சாள்ஸ் நிர்மலநாதன் கள விஜயம்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒட்டன் குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் (23.10.2023) முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட காணிக் கிளையின் உத்தியோகத்தர்கள் மாகாண நில அளவையாளர் மற்றும் இப்பகுதி கிராம அலுவலகர் என பலரும் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
ஆலயத்திற்கு தேவையான பல்வேறு பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கான நடவடிக்கை
குறிப்பிட்ட காலத்துக்குள் இவ்வாலய கட்டுமான பணிகள் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், இவ்வாலயத்திற்கு சில தேவைப்பாடுகள் இருந்தமையினால் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக கலந்துரையாடலும் இடம் பெற்றிருந்து.
இந்நிலையில் இந்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை தவிர ஏனைய பல சமூக நலத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.







படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
