முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்டவைத்திய அதிகாரி இன்மை மற்றும் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை என்பவற்றால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்டவைத்திய அதிகாரியை நியமிப்பதுடன், முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கணிய அச்சுவெட்டு வருடியினையும் (CT scanner) பெற்றுக்கொடுக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறப்பினர் ரவிகரன் தீர்மானமொன்றை முன்மொழிந்தார்.
ஒருங்கிணைப்புக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டதுடன், இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
\
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது சட்டவைத்திய அதிகாரி இன்மையால் எமது மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
குறிப்பாக இறப்பவர்களின் உடல்களை உடல்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பின், கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலைக்கே உடலங்களை எடுத்துச்சென்று உடற்கூற்றப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய நிலைகாணப்படுகின்றது.
இவ்வாறு எடுத்துச் செல்லும் உடல்களை உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டுவிட்டு மீள எடுத்துவர இரண்டு நாட்களாகின்றன. இதனால் இறந்தவருடைய உறவினர்கள் பலத்த இடர்பாடுகளுக்குப் பின்னரே உடலத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்கின்ற நிலைகாணப்படுகின்றது.
பரிசோதனை
எனவே முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சட்டவைத்திய அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
இதனால் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய நோயாளிகள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைகள் காணப்படுகின்றன.
இவ்வாறாக இறந்தவர்களின் உடல்கள் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கும், CTஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகள் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுவரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைந்து ஒரு சட்டவைத்திய அதிகாரியை நியமிப்பதுடன், கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) வழங்கப்படவேண்டுமெனவும் தீர்மானத்தை முன்மொழிகின்றேன்.''என தெரிவித்துள்ளார்.





லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
