முல்லைத்தீவின் அபிவிருத்திக்கு தடை இரண்டு தமிழ்கட்சிகளே: உபதவிசாளர் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Politician Sri Lanka Government
By Keethan Jan 10, 2026 04:25 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டம், இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு காரணம் இங்குள்ள இரண்டு கட்சிகள் தான் என கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்துள்ளார்.

உபதவிசாளர் அரச அதிகாரியினை அச்சுறுத்தியாக வெளியான செய்தி தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

டக்ளஸுக்கு பிணை! EPDPயின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய விடுதலை புலிகளின் தலைவர்

டக்ளஸுக்கு பிணை! EPDPயின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய விடுதலை புலிகளின் தலைவர்

அபிவிருத்தி நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“தனது வட்டாரத்தில் வீதி அபிவிருத்தி செய்வதற்காக யே.சி.பி இயந்திரத்தினை கடந்த ஞாயிற்றுகிழமை தொடக்கம் பிரதேச சபை செயலாளரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரையில் எனக்கு அந்த இயந்திரம் கொடுக்கப்படவில்லை.

எனது கிராம மக்கள் என்னை வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும், மின்விளக்கு பொருத்தவேண்டும் என அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே பிரதேச சபைக்கு அனுப்பினார்கள்.

முல்லைத்தீவின் அபிவிருத்திக்கு தடை இரண்டு தமிழ்கட்சிகளே: உபதவிசாளர் குற்றச்சாட்டு | Mullaitivu Deputy Chief Minister S Accusation

பிரதேச சபை இயந்திரம் வழங்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி வேலையினை செய்யாமல் விடவில்லை. நான் அந்த இடத்தில் வேறு இயந்திரம் ஒன்றினை வைத்து, வீதி அபிவிருத்தி பணியினை முன்னெடுக்க முயற்சி செய்தேன்.

இந்த நிலையில், நான் வீதி அபிவிருத்தி வேலைசெய்யும் இடத்திற்கு குறித்த அதிகாரி. உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு வந்து மறிக்க வந்துள்ளார். அந்த இடத்தில் நான் அவருடன் நீங்கள் கனரக இயந்திரம் தரவில்லை செய்யும் எங்களை என்றாலும் விடுங்கள் என்று கூறினேன்.

புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்

புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்

அதற்காக அதிகாரியை அடிக்கவோ கொலை அச்சுறுத்தலோ நான் விடவில்லை. இதுதான் உண்மைச் சம்பவம்.

எனது மக்களுக்கான அபிவிருத்தி முயற்சியினை தடைசெய்யும் நோக்குடன் தான் குறித்த அரச அதிகாரி நடந்துகொண்டார். பிரதேச செயலத்தினால் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் வீதிக்கு வடிகால்(கான்) வெட்டுவதற்காகவே பிரதேச சபையிடம் கனரக இயந்திரத்தினை கேட்டிருந்தேன்.

அவதூறாக பேச இதுதான் காரணம்

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளமை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் நாங்கள் மக்களின் அபிவிருத்திக்காக வந்தோம். அநுர தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், எங்கள் கிராமத்திற்கும் அபிவிருத்தி செய்வார் என்ற நம்பிக்கையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை நாங்கள் கொடுத்துள்ளோம். இங்குள் இரண்டு தமிழ்கட்சிகளும் தங்கள் கட்சியினை வளர்ப்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள்.

முல்லைத்தீவின் அபிவிருத்திக்கு தடை இரண்டு தமிழ்கட்சிகளே: உபதவிசாளர் குற்றச்சாட்டு | Mullaitivu Deputy Chief Minister S Accusation

இவர்களுக்கு,  மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்சியும் அவர்களும் அவர்களின் வளர்ச்சியும் தான் நோக்கம்.

முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு இந்த இரண்டு கட்சிகள் தான் காரணம்.  தன்னையும் கட்சியையும் வளர்த்துக் கொண்டு,  மக்களை ஏமாற்றியது தான் மிகுதியாக உள்ளது.

இவ்வாறான கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், இங்கு நடக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு  தடையாக இருக்கிறார்.

எமது பிரதேசத்தினை பல மடங்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்வதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசாங்கத்திடம் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆறு வீதிகள் வந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றியவுடன் நடந்த சம்பவம் இது" என  குறிப்பிட்டுள்ளார்.

கதி கலங்கப் போகும் இந்தியா! இலங்கைக்குள் அமெரிக்காவின் பத்து உலங்கு வானூர்திகள்

கதி கலங்கப் போகும் இந்தியா! இலங்கைக்குள் அமெரிக்காவின் பத்து உலங்கு வானூர்திகள்

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US