உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்
குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயமானது நாட்டின் நீதிப் பொறிமுறையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்றையதினம்(28.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையில் ஹசுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக அறிக்கை
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான நாடாளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் எம்பிகளும் புறக்கணிக்க வேண்டுமென நாம் ஆழமாக வலியுறுத்துகின்றோம்.
குருந்தூர் சட்டவிரோத பௌத்த கட்டுமானம் தொடர்பாக நீதியான தீர்ப்பு வழங்கியமைக்காக தொடர் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்ட முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் நேர்மையை போற்றும் வகையில் தமிழ் சமூகமாக ஆதரவை வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் அவரின் இந்த முடிவுக்கு காரணமான அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சார்ந்த அனைத்து கட்டமைப்புகளும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் வேண்டுகின்றோம்.
இலங்கையின் சகல முற்போக்கு சக்திகளும், ஐ.நா அமைப்புக்களும் நீதியை வழங்கும் நீதிபதிக்கே ஏற்பட்டுள்ள இந்த பாரதூர நிலையை சீர்செய்ய நீதி பரிபாலனம் சுயாதீனமாக இயங்க உச்சபட்ச நடவடிக்கையை இந்த துக்ககரமான தருணத்தில் எடுக்க வேண்டி நிற்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan