முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றுமுன் தினம் (20.03.2024) தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் நடைப்பெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புகைப்படதுறையில் கால்பதித்து மறைந்த புகைப்பட
கலைஞர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தியதை
தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன், மற்றும் சங்க உறுப்பினர்கள் படப்பிடிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.