பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்றிட்டங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது - முல்லைத்தீவு அதிபர்
தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(07.08.2026) முல்லைத்தீவில் நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென்னை உற்பத்தியாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த தென்னை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் உள்ளன. மக்களின் காணிகள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கும் காலம் கிட்டியுள்ளது.
குரங்கு, யானைகளால் ஏற்படும் தாக்கம் தெங்கு செய்கை விவசாயிகளை பாதிக்கின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நோய்தாக்கம், வெள்ளை ஈ தாக்கம் என்பன தெங்கு விவசாயிகளையும் தாக்கியுள்ளன.

இவ்வாறான தாக்கங்கள் இருந்தாலும் இன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு நம்பிக்கையான எதிர்காலத்தினை காட்டுகின்றது. அரசாங்கம் மக்கள் மீதுகொண்டுள்ள அக்கறை ஈடுபாட்டிற்கு முன்னுதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
மாவட்டத்தில் சி.டி.ஓ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் ஆளணியினரை மீள சேர்க்கின்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிகை இருக்கின்றது. இந்த மக்கள் கடின உழைப்பாளிகள் சிறந்த முறையில் அவர்களின் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள் அரசாங்கத்தினால் செய்கின்ற இந்த உதவிகளை சிறந்த முறையில் நீங்கள் பயன்படுத்தி எதிர்காலத்தினை சுவீட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்