முல்லைத்தீவு மதுபானசாலை விவகாரம்: அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்கள் விசனம்
முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி பிரதேச செயலாளர் ஊடாக
கலால் வரி திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் இதுவரை எவ்விதமான
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையம் ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டது.
எதிர்ப்பு கடிதங்கள்
இதனால் குறித்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள், பாடசாலை இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கும் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை கடந்த மாதம் வழங்கி இருந்தார்கள்.
அதனையடுத்து அரசாங்க அதிபராலும், பிரதேச செயலாளராலும் மக்களால் வழங்கப்பட்ட எதிர்ப்பு கடிதங்கள் இணைக்கப்பட்ட கடிதம் இலங்கை மதுவரி திணைக்களத்தினருக்கு அனுப்பப்பட்டும், இது வரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறித்த கிராம மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
