புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! இருவர் காயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது காயமடைந்த 36 அகவையுடைய 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவு பகுதியை சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 21 மற்றும் 22 அகவையுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
