முல்லைத்தீவு கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
முல்லைத்தீவு - முறிகண்டி ஏ-09 விதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(15.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறி கண்டி ஏ-09 வீதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்று முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 60 வயதான செல்லையா விஜேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam