யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!
யாழ்ப்பாணம்(Jaffna) மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமான நீர் வழங்கல் வீடுகளுக்கு செல்கிறது.
இன்றையதினம்(27) யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் வீதியில் உள்ள வீடுகளுக்கு வளமையான குழாய் நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிகளில் குறித்த நீர் நிரப்பப்பட்டுள்ளது.
மண்கலந்த நீர்
குறித்த பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் நீரை போத்தலில் எடுத்த போது சிவப்பு நிறமாக காட்சி அளித்ததை அவதானித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குழாய் நீரில் ஏற்பட்ட பழுது காரணமாக திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
திருத்த வேலை
திருத்த வேலையின் போது மண் உட்பகுந்த காரணத்தினால் அருகில் இருக்கும் வீடுகளின் குடி நீரில் சிவப்பு மண் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்ட போது குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 5 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
