ரிஷாத் பதியுதீனிடம் முபாரக் அப்துல் மஜீத் விடுத்துள்ள கோரிக்கை
ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பதில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க முன்வர வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலமா கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருப்பது நல்லதல்ல. அதிலும் இத்துப்போன வாளுடன் இருப்பது வெற்றியை தராது.
ரவூப் ஹக்கீமின் டீல் அரசியல்
நாட்டின் பிரதமரை மற்றும் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் ரவூப் ஹக்கீம் பெரும்பாலும் தோற்றுப்போன ஒருவராகவே உள்ளார். அவர் ஆதரித்த பலர் தோற்ற வரலாறே உண்டு. காரணம் ரவூப் ஹக்கீம் சமூகத்துக்கான அரசியல் செய்யாமல் டீல் அரசியல் செய்யும் ஒருவர்.
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக...! |
2015 தேர்தலில் ரிஷாத் பதியுதீன், மைத்திரியை ஆதரிப்பதை பார்த்து தபால் வாக்களிப்பும் முடிந்த பின், கடைசி நேரத்தில் தான் ஹக்கீம் மகிந்தவிடமிருந்து பெல்டி அடித்தார்.
ஆகவே, இந்த விடயத்தில் ரிஷாத் பதியுதீன், ஹக்கீம் பின்னால் செல்லாமல் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது..



