நாடாளுமன்றத்தில் புதிய விலையில் உணவு உட்கொள்ளும் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது உணவிற்காக இன்று(05.02.2025) முதல் 2,000 ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 450 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், அவைக் குழுவின் தீர்மானத்தின் படி, 2,000 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
ஆளும், தேசிய மக்கள் சக்தி கட்சியால் இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
உணவு விலைகள்
இதன்படி, காலை உணவு 600 ரூபாவாகவும் மதிய உணவு 1,200 ரூபாவாகவும் மாலைத் தேநீர் 200 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு குறித்தும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு உத்தரவுகள் குறித்தும் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |