நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தைக் கொண்டு வாழ முடியுமா!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தைக் கொண்டு வழ முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் அவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54,000 சம்பளம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேல் அதிகமாக பல்வேறு கொடுப்பனவுகள் அதில் சேர்க்கப்பட்டாலும் அடிப்படை சம்பளம் என 54,000 மட்டுமே வழங்கப்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரச கடை நிலை ஊழியர் ஒருவரின் சம்பளத்தை விடவும் இது குறைவானது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொடுப்பனவு உச்சநீதிமன்ற நீதி அரசர் ஒருவரின் கொடுப்பவர்களுக்கு சமமானதாக இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் அவ்வாறு சம்பளங்கள் உயர்த்திக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார். மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும் போது நாம் அவ்வாறு செய்வது சரியில்லை என்பதை புரிந்து கொண்டு அவ்வாறு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார் ஆளும் கட்சியினர் தற்பொழுது கெப்களை கொள்வனவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கெப் இல்லாமல் பஸ்ஸில் சென்று மக்களுக்கு சேவை செய்ய முடியாதா? அவ்வாறு செய்ய முடியாது என்ற காரணத்தினால் தானே, கேப் கொள்வனவு செய்யப்படுகின்றது என தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam