பிரதமரின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் பங்கேற்பு!
முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்வு இம்முறை கொரோனாக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய நேற்று இடம்பெற்றது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொரோனாத் தொற்று காரணமாக, இவ்வாறு சுருக்கமாக நடைபெற்றது எனப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கட்சிகள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.எம்.முஷாரப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், பைசல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பர்சான் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
you may like this video





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 47 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
