ஆங்கில மொழி பாடநெறியில் கலந்துக்கொள்ளாத எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் ஆங்கில மொழி பாடநெறியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்வது மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
150 மணி நேர வகுப்பு

150 மணி நேரம் கொண்ட இந்த ஆங்கில பாடநெறியை தேசிய மொழிகள் ஆணைக்குழு நடத்தி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் தினங்களில் முற்பகலில் இரண்டு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆங்கில வகுப்பு நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த ஆங்கில மொழி பாடநெறி ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்பத்தில் சுமார் 30 பேர் அதில் கலந்துக்கொண்டுள்ளனர்.
வகுப்பில் கலந்துக்கொள்ளும் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது

எனினும் தற்போது அந்த எண்ணிக்கை நான்கு முதல் 5 பேராக குறைந்துள்ளது. ஒரு சிலர் மாத்திரமே பாடநெறியை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆங்கில மொழி பாடநெறி தற்போது நிறைவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெறும் காலத்தில் இந்த ஆங்கில பாடநெறி நடத்தப்படுவதுடன் ஜனவரி மாதம் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri