இலங்கையில் குரங்கம்மை தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கம்மை தொற்று இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் நேற்று கண்டறியப்பட்டார்.
முதலாவது நோயாளி
இந்தியாவில் குரங்கம்மை தொற்றுக்கு உள்ளான முதலாவது நோயாளி நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பெருமளவு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரும் தரும் நிலையில், குரங்கம்மை தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கை
குறித்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.