பிரதமருக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும்(Selvam Adaikalanathan) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று(21) இடம்பெற்றது.
இதன்போது தலைமன்னார் பகுதியில் இராணுவம், பொலிஸ், மற்றும் கடற்படையினரால் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும் அரச படைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை
இதேவேளை இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் ஐயப்ப சாமி பக்தர்களின் விமான கட்டணங்களை குறைப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வந்து இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. அதை தளர்த்த வேண்டியும் ,விமான கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பிரதிநிதிகளும், ஐயப்ப சாமி பக்தர்கள் சிலர் செல்வம் அடைக்கலநாதனுடன் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri