சம்பள விபரங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான, நாடாளுமன்றில் வழங்கப்படும் ஊதிய விபரங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது முழு ஊதியத் தாளை (pay sheet) முகநூலில் பகிர்ந்ததன் மூலம், இவ்வாறு செய்யும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரான அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மாதாந்த ஊதியம்
அவர் வெளியிட்ட ஊதிய விவரங்களில், ஒரு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் முழு சலுகைகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு எம்.பிக்கு வழங்கப்படும் மாதாந்த ஊதியம் மற்றும் சலுகைகள்:
• மாத ஊதியம்: ரூ. 54,285
• விருந்தோம்பல் படி: ரூ. 1,000
• தொலைபேசி கொடுப்பனவு: ரூ. 50,000
• உறுப்பினர் கூட்ட கொடுப்பனவு: ரூ. 5,000
• அலுவலக கொடுப்பனவு: ரூ. 100,000
• எரிபொருள் கொடுப்பனவு: ரூ. 97,428.92
• போக்குவரத்து கொடுப்பனவு: ரூ. 15,000
இதனால், அவருக்கான மொத்த நிகர ஊதியம் 317,760.39 ரூபாவாகும் என சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவுகளாக
• உணவு வசதிக்கான கட்டணம் – ரூ. 1,200
• தனிப்பட்ட வருமான வரி – ரூ. 3,728.53
• முத்திரை வரி – ரூ. 25 நான் ஆரம்பத்தில் ஊதியம் பெறவே வேண்டாம் என முடிவு செய்தேன்.
பின்னர், அந்த தொகை திறைசேரியில் சேரும் என்பதால், அதை சமூக சேவைக்காகப் பயன்படுத்தலாம் என எண்ணினேன் என தெரிவித்துள்ளார்.
தாம் பெற்ற ஊதியத்திற்கும் இரண்டு மடங்கு பணத்தை சமூக சேவைக்காக செலவழிப்பதாகவும், தன்னுடைய தொகுதியில் வாழ் மக்களுக்குத் தமது சேவைகள் தெரியும் எனவும் தெரிவித்தள்ளார்.
தாம் ஒரு தொழிலதிபர் என்பதால், தமக்கு ஊதியம் தேவையில்லை," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
