ஓய்வூதியம் இரத்து:நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் மசோதாவை எதிர்த்து, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்படும் சட்ட விதிகள்
நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றால் சட்டமன்றத்தின் ஓய்வூதியத்தை மட்டும் குறைப்பது நியாயமற்றது.என்ற வாதத்தை முன்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்களாக இருக்கும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னிலையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வி்டயத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,
நாட்டின் நீதித்துறை அமைப்பால் நீதி வழங்கப்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்று கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri