கயந்த கருணாதிலக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம்
இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில் அவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam