நீதி அமைச்சரை மன்னிப்பதாக அறிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவை மன்னிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் போது அமைச்சர் அநாகரிகமான முறையில் கைகளில் சைகை செய்து தம்மை இழிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் அந்த செயலை மன்னிப்பதாக அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமது சிறப்புரிமை மீறப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சரை அவமரியாதை செய்ய தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பௌத்த மத கோட்பாடுகளுக்கு அமைய தாம் நீதி அமைச்சரை மன்னிப்பதாக அஜித் பெரேரா இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.