கல்கிஸை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது

Colombo Sri Lanka Police Investigation Crime Gun Shooting
By Rakesh May 19, 2025 01:25 PM GMT
Report

கல்கிஸையில் சில்வெஸ்டர் வீதிக்கு அருகிலுள்ள சந்தியில் 19 வயது இளைஞர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கொட்டாவ விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மற்றும் குற்றச் செயலுக்கு ஒத்தாசையாக இருந்தவர் என இரண்டு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரச உடமையாக்க கோரிக்கை

கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரச உடமையாக்க கோரிக்கை

கைது

சந்தேகநபரான பிரதான துப்பாகிதாரியிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, பதினைந்து 9 மி.மீ. தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இலங்கை விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் அங்கு ஒன்றரை ஆண்டுகள் சேவையில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடி வந்துள்ளார்.

கல்கிஸை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது | Mount Lavinia Shooting Main Gunman Arrested

கொட்டாவை, மாம்புல்கொடை பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் வீட்டின் பின்புறத்தில் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளின் பாகங்கள், இரண்டு போலி இலக்கத் தகடுகள் புதைக்கப்பட்டிருந்தன.

கடந்த 10 ஆம் திகதி குற்றச் செயலுக்கு உதவிய மற்றும் ஒத்தாசையாக இருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் தற்போது நாட்டிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கல்கிஸைப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று தெஹிவளை - கல்கிஸை நகர சபை திண்மக்கழிவு முகாமைத்து பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தெஹிவளை, ஆபர்ன் பிளேஸைச் சேர்ந்த 19 வயது பிரவீன் நிசங்க என்ற இளைஞரைச் சுட்டுக் கொன்றனர்.

கல்கிஸை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது | Mount Lavinia Shooting Main Gunman Arrested

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸைப் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்ட நபரைத் துரத்திச் சென்று, பின்னர் அருகில் இருந்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.

பிரதான வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தேறியிருந்தது. கொல்லப்பட்டவர் தற்போது விளக்கமறியலிலுள்ள தெஹிவளை சத்துரி என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட பெண்ணின் மகன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது மகளும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US