கல்கிஸ்சையில் பரபரப்பு - வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்மலானை சில்வா மாவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்காக வந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam