கிண்ணியாவில் மோட்டார் சைக்கிள் - டிப்பர் மோதி விபத்து: ஒருவர் பலி
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று மருத்துவமனை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று(27) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலியானவர், நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
மக்களுக்கு அச்சுறுத்தல்
குறித்த நபர் கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கெங்கையிலிருந்து நாள் தோறும் மணல் ஏற்றிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் தினமும் நடுஊற்று வீதி வழியாக அதி வேகமாக செல்வதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலமுறை மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, அழுத்தங்களும் ஏற்படுத்தியிருந்தாலும், இந்த வீதியில் டிப்பர்கள் அதிவேகமாக பயணிப்பது தொடர்ந்தும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த வீதியானது பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பாதுகாப்பற்ற பாதையாக இருப்பதால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள் டிப்பர் அனுமதி வழங்கும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam