லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்! பெண் உயிரிழப்பு
குருநாகல், மாஸ்போத பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(14.3.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி தாய், முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, எதிர்த்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் அமர்ந்து பயணித்த அவரது பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள குருநாகல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam