முல்லைத்தீவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்
முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (05.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரியவந்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
