கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: ஆபத்தான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெல்லவாய, மொனராகலை பிரதான வீதியில் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருவர்
மேலும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
