கிளிநொச்சியில் இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி - A35 பரந்தன் வீதியின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(03.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவர் உயிரிழப்பு
வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டர் கிரேண்டர் வாகனத்தின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 19 வயது ஜெரின் கனிஸ்ரன் மற்றும் 18 வயது தியாகராசா விக்கினேஸ்வரன் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த இரு இளைஞர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனை முடிந்த பிறகு உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
