வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் படுகாயம்
யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் கூடத்து மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கும் ஏழாம் கட்டை பகுதிக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த நபர் அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் தலைக்கவசம் அணிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri