வவுனியாவில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில்
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (15) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
