பதுளையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து : சாரதி உயிரிழப்பு - பெண் படுகாயம்
பதுளை - கிராந்துருக்கோட்டையில் மஹியங்கனை - தெஹியத்தகண்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(12.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்துள்ளது.
சாரதி உயிரிழப்பு
இதன்போது நாயுடன் மோதிய மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரம் ஒன்றில் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கிராந்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருடன் பயணித்த பெண் பலத்த காயங்களுடன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து கிராந்துருக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.