யாழில் பல்வேறு பகுதிகளில் மோட்டர்கள் திருட்டு: இருவர் கைது
யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டர்கள் திருடிய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் தண்ணீர் மோட்டர்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மோட்டர்கள் மீட்பு
இந்தநிலையில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் சரசாலை,மட்டுவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதில் சரசாலை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 மோட்டர்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri