யாழில் 35 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்ட ஆலயம்!
யாழ்ப்பாணம்-பலாலி நாகதம்பிரான் ஆலயம் 35 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்காக முழுமையாக நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கோவில் அமைந்துள்ள பகுதி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து வந்தது.
பூஜை வழிபாடுகள்
கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன் ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் முட்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்வதற்கும் எந்த நேரத்தில் எவரும் சென்று வரக்கூடிய வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்றைய தினம் ஊர் கூடி மக்கள் பொங்கல் பொங்கி வழிபட்டதுடன் இராணுவத்திற்கும் ஜனாதிபதிக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.



ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam