அன்னையர் தினமான இன்று இலங்கையில் தாயொருவரின் பாசப்போராட்டம்! வேதனையில் மக்கள்
சர்வதேச அன்னையர் தினமான இன்று (11) இலங்கையில் தாய் ஒருவரின் பாசப் போராட்டம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை சம்பவித்த கோர விபத்தில் பிள்ளையை காப்பாற்றிவிட்டு தனது உயிரைத் துறந்த தாய் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இன்று அதிகாலை நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து
இந்தநிலையில் பெண்ணொருவர் தனது கைக்குழந்தையை காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ஒரு தாய் குழந்தையை சுமந்து பெற்று வளர்க்கும் அந்த வேதனையைவிட அதிக வேதனையை இந்தச் சம்பவம் கொடுத்திருக்கக் கூடும். தான் உயிர் துறக்கும் நேரம் தனது பிள்ளையை காப்பாற்றிவிட்டோம் என்ற திருப்தியுடன் அந்தப் பெண் சென்றிருக்கலாம்.
எத்தனையோ கனவுகளை சுமந்து தனது பிள்ளையோடு அந்த தாய் பயணித்திருப்பார். ஒரு நிமிடத்தில் அத்தனையும் வெறும் தூசு போல மாறி தனது உயிரை விட்டு குழந்தையை உயிர் பிழைக்க வைத்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இன்றைய அன்னையர் தினத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |