இந்தியாவில் பிறந்து சில நாட்களான குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்த தாய்
கர்நாடக மாநிலம் பெங்களூரு(Bengaluru) அருகே உள்ள நெலமங்களா பகுதியில், மன அழுத்தத்தில் இருந்த தாய் ஒருவர் தனது 38 நாட்கள் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ராதா என்ற பெண் பிரசவத்திற்குப் பின் உடல் மற்றும் மனநிலை சரியில்லாமல், தனியாக வசித்து வந்த நிலையில், பசிக்காக அழுத தனது குழந்தை பால்குடிக்க மறுத்ததாக கோபத்தில் வெந்நீரில் போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
கொடூர செயல்
தீக்காயமடைந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸார், "பிரசவத்துக்குப் பின் மன அழுத்தத்தால் (Postpartum Depression) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது" என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராதா செய்தது கொடூர செயல் என பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
