வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தாய் - மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
மாத்தறையில் கடலில் நீராடும் போது உயிரிழந்த மாணவியின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அம்பேகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த இமல்ஷா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிகம, முதுகொட்டுவ கடலில் நீராடும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவரது உறவுக்கார பெண் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் தாய் அண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
வாடகை வீட்டில் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தயாரிய கொண்டிருந்த மாணவி, இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவியின் திடீர் மரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாவும் மிகவும் திறமையான ஒரு மாணவியை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
