தூக்கில் தொங்கி இரண்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை
முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்திற்கு உட்பட்ட வடகாடு கொல்லவிளாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர் மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கொல்லவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கணவனைப் பிரிந்த நிலையில் ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
