ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்!
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில்நேற்றைய தினம் 25.04.2026 ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தருமபுர பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை விற்பனை
இந்த சம்பவம் குறித்த மேலும் தெரிய வருகையில்,
தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதாகவும் கூறி உள்ளனர்.

இருப்பினும் அவர்களிடம் தற்பொழுது இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது தற்பொழுது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா அல்லது வேறு யாருடைய குழந்தையா என மேலதிக விசாரணைகளை தர்மபுற பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri