விஷத்தால் உயிரிழந்த குழந்தை! மீட்கப்பட்டுள்ள தாயின் கடிதம் - தென்னிலங்கையில் சம்பவம்
மாத்தறை - கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியில் விஷத்தால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஆறு மாத வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அழுதுகொண்டிருந்த குழந்தைகள்
வீட்டிலிருந்த ஒன்பது மாத மற்றும் மூன்று வயது குழந்தைகள் அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டு அயல்வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த ஒன்பது மாத குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
22 வயதுடைய தாய் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என தெரியவரும் நிலையில், குழந்தைக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாயின் கடிதம்
மேலும், தனது மூத்த குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது எனவும் அந்த பெண் எழுதி வைத்திருந்த கடிதமொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மாலிம்படை பொலிஸாரை எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது சம்பவம் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியிருந்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri
